மட்டு முகத்துவாரம் வெளிச்ச வீடு சிறுவர் பூங்கா சிறுவர் தினத்தில் கூட பாவிக்க முடியாது சிறுவர்கள்--பொதுமக்கள் கடும் விசனம்!
மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான முகத்துவாரம் வெளிச்சவீடு சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் சறுக்கல், ஊஞ்சல்கள், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து துண்டு துண்டாக கிடக்கின்றதுடன் அந்த பகுதி குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதால் சிறுவர்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளான சிறுவர்கள் கூட விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அந்த பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீடு மற்றும் அதற்கு அருகில் வாவிக்கரையில் அமெரிக்க மக்களின் நிதி பங்களிப்பின் ஊடாக யூ.எஸ்.எய்ட்ஸ் நிறுவனம் பல இலட்சங்களை கொண்டு சிறுவர் பூங்கா அமைத்து மாநகரசபையிடம் கையளித்து மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது
மட்டு மாநகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த சிறுவர் பூங்கா பல காலங்களாக கவனிப்பார் அற்று கிடக்கின்றதுடன் அங்கு பல இலட்சம் ரூபா செலவில் பொருத்தப்பட்ட ஊஞ்சல்கள், சறுக்கல், மற்றும் மிருகங்கள் உருவம் கொண்ட விளையாட்டு உபகரணங்கள் உடைந்து துண்டு துண்டாக இருக்கின்றது.
அதேவேளை அங்கு அமைக்கப்பட்ட மலசல கூட கதவுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளதால் அதனை பாவிக்க முடியாது உள்ளதுடன் அந்த பகுதியில் கழிவு பொருட்களால் அகற்றப்படாததால் அதில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
அதுமட்டுமல்ல இரவு வேளைகளில் அங்கு மதுபானம் குடிக்கும் இடமாக மாறியுள்ளதுடன் இரவில் மின் விளக்குகள் இல்லாது இருள் சூழ்ந்துள்ளது சிறுவர்கள் அந்த உபகரணங்களில் விளையாட முடியாது உள்ளதுடன் தமது பொழுது போக்கான விளையாட்டுகளை விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் சிறுவர்கள் அந்த உபகரணங்களில் விளையாட முடியாது உள்ளதுடன் தமது பொழுது போக்கான விளையாட்டுகளை விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோகிவருகின்றதாகவும் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர்
அதேவேளை மாநகர சபையை பொறுப்பேற்று 4 மாதங்களாகியும் இதுவரை இந்த சிறுவர் பூங்காவை பராமரிக்காமல் அழிவடைய விட்டுள்ளது இதனால் எமது சிறுவர்கள் சென்று விளையாட இடம் இல்லாது சிறுவர்கள் சிறுவர் தினத்தில் கூட சென்று விளையாட முடியாது சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை அதேவேளை இங்கு இருக்கும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு கண் இல்லையா? எங்கள் வரிப்பணத்தில் எங்களுக்கு சேவை செய்யாமல் யாருக்கு சேவை செய்கின்றனர்?
அமெரிக்க மக்களின் நன்கொடையாக பெரும் தொகை நிதியில் அமைக்கப்பட்டு மாநகரசபையிடம் கையளிக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவை பராமரிக்காமல் பாதுகாக்காமல் அழிவடைய விட்டுவிட்டு பின்னர் அதனை புணர் நிர்மாணம் செய்ய என எங்கள் வரிப்பணத்தை எடுத்து வீண் விரயம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது
என்பதுடன் மக்களின் வரிப்பணம் இவ்வாறுதான் வீணடிக்கப்படுகிறது. என கேள்வி எழுப்புகின்ற பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பாக கவனம் செலுத்தி அதனை சீர் செய்து சிறுவர்கள் விளையாட வழி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.