இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான பாதீடு மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026  ஆண்டுக்கான பாதீடு மேலதிக  5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.







மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிற்கான விசேட சபை அமர்வு இன்றைய தினம் (12) வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது.


 பிரதேச சபை உறுப்பினர்கள்,  பிரதேச சபை செயலாளர் உட்பட பிரதி தவிசாளர், கலந்து கொண்ட இவ் விசேட அமர்வில் தவிசாளரினால் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


  பின்னர் வரவு செலவு அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது  இலங்கை தமிழரசு கட்சியின், 06 உறுப்பினர்கள், சுயேட்சை குழு கட்சியின், 02 உறுப்பினர்கள் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின்,01 உறுப்பினர், நல்லாட்சிக்காண தேசிய முன்னணி கட்சியின் 01, உறுப்பினர், ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் 01 உறுப்பினர், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 


அத்துடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சியின் 01  உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் 01 உறுப்பினரும் 

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு தேசிய மக்கள் சக்தி  கட்சியின், 04  உறுப்பினர்கள் நடுநிலை வசித்தனர்.


இதன்படி 17  உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் மேலதிக 05 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றது.

Powered by Blogger.