சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்தகைமை கற்கையை பூர்த்தி செய்த மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார்.
கெளரவ விருந்தினராக உள்நாட்டு இறைவரித்திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.மயூரி கலந்து கொண்டார்.








