கர்ப்பிணி தாய்மார்கள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு டிசம்பர் 16 திகதிக்கு முன்னர் வழங்கப்படும்!
கர்ப்பிணி தாய்மார்கள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு டிசம்பர் 16 திகதிக்கு முன்னர் வழங்கப்படும் மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சு அறிவிப்பு –
மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சு அனர்த்தம் மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி தாய் மாருக்கு டிசம்பர் மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு எதிர்வரும் 16ம் தேதிக்கு முன்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் என அமைச்சின் ஊடக பிரிவு இன்று வெள்ளிக்கிழமை (12) அறிவித்துள்ளது.
இந்த கொடுப்பனவு ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் இது 2025 நவம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொடுக்கப்படும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பள்ளி பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக இந்த கொடுப்பனவு எதிர்வரும் 16 ம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் என அமைச்சின் ஊடக பிரிவு அறித்துள்ளது.
