நிந்தவூர் பிரதி தவிசாளர் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்த இருவருக்கு 24 வரை விளக்கமறியல் - நா.உறுப்பினர் உட்பட 10 பேர் தலைமறைவு-

 நிந்தவூர் பிரதி தவிசாளர் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்த இருவருக்கு 24 வரை விளக்கமறியல் - நா.உறுப்பினர் உட்பட 10 பேர் தலைமறைவு-

( க.சரவணன்) 


நிந்தவூர்  பிரதேச சபையினுள் பாராளுமன்ற உறுப்பின் தலைமையயிலான குழு ஒன்று உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தலைமறைவாகிய  நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று புதன்கிழமை (10) உத்தரவிட்டார். அதேவேளை தலைமறைவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதுபற்றி தெரியவருவதாவது 
 

குறித்த பிரதேச சபையின் தவிசாளர்  அண்மையில் பதவி விலக்கப்பட்டார் இந்த நிலையில்  பிரதி தவிசாளர்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜ. இர்பான்; சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.


இந்நிலையில் சம்பவ தினம் திங்கட்கிழமை பகல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் பிரதி தவிசாளர் அறையில் உள் நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதி தவிசாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு  பொலிசாரை வரவழைக்கப்பட்டனர்.


அங்கு சென்ற பொலிசர் இது நிர்வாக ரீதியான பிரச்சனை எனவே கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதி பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


இதனை தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிற்பகல் 2.00 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் அத்து மீறி உள் நுழைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தலைமையிலான  30 பேர் கொண்ட அடியாட்களுடன் உள் நுழைந்து  மேசையில் இருந்த பொருட்களை  உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 


இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில்  இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவன் முன்னிலையில ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான்  உத்தரவிட்டார்.


இதேவேளை தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான  நடவடிக்கையை  மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் முன்னெடுத்துவருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 


Powered by Blogger.