இன்னும் ஓரிரு தினங்களில் பாலமானது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளது
டிற்வா பேரிடர் காரணமாக கடந்த 28.11.2025 அன்றைய தினம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது கடும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களுக்கான போக்குவரத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது
இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 11மையில் பகுதியில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கெதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த பாலத்தின் புணரமைப்பு பணிகள்தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது
இன்னும் ஓரிரு தினங்களில் இப்பாலமானது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளது




