பாலீஸ்வரர் ஆலயத்தில் கறுவாக்கேணி ஸ்ரீ சபரிபீடம் யாத்திரை குழுமத்தினரால் சிறப்பாக நடைபெற்று வருகின்ற *ஐயப்ப சுவாமி பூஜை
இன்றையதினம் 12/12/2025 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் கறுவாக்கேணி ஸ்ரீ சபரிபீடம் யாத்திரை குழுமத்தினரால் சிறப்பாக நடைபெற்று வருகின்ற ஐயப்ப சுவாமி பூஜை மற்றும் பஜனை நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
எனவே இவ் பூஜை வழிபாடுகளில் ஏராளமான பக்த அடியவர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






