கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவாகாரங்கள் பிரிவினால் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு இன்று 23.10.2025) முற்பகல் 10 மணிக்கு நல்லையா மண்டபத்தில் சர்வதேச விவகாரங்கள் இணைப்பாளர் வெ. அழகாரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ் நாட்டின் முன்னாள் தமிழ்நாட்டு பொலீஸ் ஆணையாளர் நாயகம் கலாநிதி சைலந்தர் பாபு (IPS ) கலந்து கொண்டார். Cyber hygiene and Alertness of youth எனும் தலைப்பில் இச்செயலமர்வு இடம்பெற்றது. மாணவர்கள் மாணவர்கள் இன்றைய தொழினுற்ப உலகில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதை வெல்வதற்கான வழிகள் பற்றி இது அமைந்தது. தமது பொலீஸ் சேவையில் பெற்ற அனுபவங்களுடாக இதனை விளக்கினார். மாணவர்களது வினாக்களுக்கு பதில் வழங்கியதுடன் செயலமர்வு நிறைவுற்றது. விரிவுரையாளர்களும் இதில் கலந்து கொண்டது இந்நிகழ்வுக்கு மேலும் வளம் சேர்த்தத்து


















