பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்!

 பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்






இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார். கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிரான்சு நாட்டிலிருந்தின் கிளம்பிய அவர், ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 3 மாத பயணத்தை நாகையில் முடித்த அவர் நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் இலங்கை யாழ்பாணம் செல்கிறார். இன்று அதிகாலை துறைமுகம் வந்த அவருக்கு சுபம் நிறுவனத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை சைக்கிளில் சென்றதால் அறிய முடிந்தது என்று கூறியுள்ள இனோசூரண், பல ஆண்டுகள் கழித்து பூர்வீக நாடான இலங்கை செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.