மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றில் 2015ம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட பேத்தி யாருக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.
மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரையும் உள்ள காலப்பகுதியில் 3 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் ;; வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குறித்த நபர் மீது தண்டனை சட்டக்கோவை 365(2) ம் பிரிவின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9 ம் திகதி இனம் காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25 திகதி வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது முதலாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறையில் அடைக்குமாறு. இரண்டாவது குற்றத்திற்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறையில் அடைக்குமாறும்.
மூன்றாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறையில் அடைக்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.