மகாத்மா காந்தியின் ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!!

 மகாத்மா காந்தி அடிகளாரின் 156 வது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.


மட்டக்களப்பு காந்தி பூங்காவில்

அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு  (02) வியாழக்கிழமை இடம்பெற்றது.


மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை









அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும்

செலுத்தப்பட்டது.


இதன் போது காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன்,  காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், வர்த்தக சங்க செயலாளர், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.


மேலும் இதன் போது இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்படும் "காந்தியம்" சிறப்பு மலர் அதன் பிரதம ஆசிரியர் எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முதல் நூல் பிரதி பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Powered by Blogger.