மட்டக்களப்பு முதலியார் சின்ன லெப்பை வீதி வடிகானில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு.
குறித்த வடிகானில் கழிவு பொருட்கள் நிறைந்து காணப்படுவதுடன் அதனூடாக வழிந்து ஓடும் கழிவு நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதுடன் கழிவு நீர் வடிகானை விட்டு வெளியேறி வீதியில் தேங்கி நிற்கிறது.
அதே நேரத்தில் குறித்த வடிகான்களில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து காணப்படுவதுடன் மரங்கள் வளர்ந்து வருகிறதுடன் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வீதியில் உள்ள குடியிருப்பவர்கள் பொது மக்கள்கள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் அந்த வீதி ஊடாக பிரயாணிக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? துர்நாற்றம் இல்லாமல் செய்வார்களா? வடிகான்களை துப்புரவு செய்வார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.