சந்திர கிரகணம்


ஆவணி மாதம் 22 ஆம் தேதி 07/09/2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி முதல் இரவு 1:26 மணி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் ராகு கிரகம் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது 


கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம், முழு  கிரகண பாதிப்பு உண்டு.

இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண தோஷம் சாந்தி செய்து கொள்ளவும். 

ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று பகல் 12 மணிக்குள் போஜனம் செய்து கொள்ளவும் அதன் பின் கிரகண முடிந்தபின் புதிதாக சமைத்த உணவை உட்கொள்ளலாம் 

பழைய உணவை உட்கொள்ளக் கூடாது.

லேசான பாதிப்பு உள்ள நட்சத்திரங்கள்  திருவாதிரை, சுவாதி ,பூசம் ,அனுஷம், உத்திரட்டாதி ஆயில்யம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு சிறிதளவு மட்டுமே பாதிப்பு உண்டு.

மேலே குறிப்பிட்டு உள்ள நட்சத்திரக்காரர்கள் அதாவது அதிகமான பாதிப்பு உள்ள நட்சத்திரக்காரர்கள் இரவு உணவருந்த கூடாது.

குளித்து முடித்து கிரகணம் ஆரம்பிக்கும் போது ஒரு சுத்தமான அறையில் தங்களுக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரங்களை உச்சரிக்கலாம். 

அதிகாலை எழுந்து குளித்துவிட்டு உங்கள் குலதெய்வக் கோயில் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட துஷ்ட தெய்வங்களுக்கு ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிக அவசியம் 

இன்னும் ஒரு மாதத்திற்கு எந்த ஒரு முடிவும் முக்கிய முடிவும் எடுக்காமல் தவிப்பது நல்லது.

அடுத்த பௌர்ணமிக்கு ஏதாவது ஒரு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று தங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு சந்திரனை பார்த்து வழிபடுவது சிறப்பு. 

அம்மாவாசை திதி வரையிலும் மனக்குழப்பம் இருக்கும் மன நிம்மதி இல்லாம இருக்கும் அதற்கு தினமும் காலை ஒரு பத்து நிமிடம் தியானம் செய்யலாம் இல்லையென்றால் ராமாயணம் மகாபாரதம் இதிகாசம் போன்றவற்றை படிக்கலாம் கேட்கலாம்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் கடக ராசி மற்றும் கடக லக்கனம்  தங்களுக்கும் மனது சம்பந்தமான பிரச்சனை இருக்கும் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் அடுத்த அம்மாவாசை திதிக்கு பின் எடுப்பது நலம் நீங்களும் கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபடு செய்யவும்.


Powered by Blogger.