கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில்

 மாநகர சபை பொதுக் கூட்ட தீர்மானத்திற்கு அமைவாக கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கால்நடை வளர்பாளர்களுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார்,மாநகர ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் மற்றும் கால் நடை வைத்திய அதிகாரி சி.தூஷ்சயந்தன் ஆகியோருடன் கால் நடை வளர்ப்பு சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




Powered by Blogger.