கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தெரிவு!

 மட்டக்களப்பு - பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக  பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் இரண்டாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 


பல்வேறு பட்டப்பின்படிப்புகளை பூர்த்தி செய்த பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டதுடன், 

சட்டத்தரணியாகவும் செயற்படுகின்றார். 



பேராசிரியர் சதானந்தன் பீடாதிபதியாகக் கடமையாற்றிய 2022 முதல் 2025 காலப்பகுதிக்குள்  சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் பல்வேறு பௌதீக வளங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த பீடத்தின் பீடாதிபதியாக 05-09-2022 ஆம் திகதியிலிருந்து கடமையாற்றிய இவரின் பதவிக்காலம் 04-09-2025 அன்று முடிவடைந்த நிலையில் இண்டாவது தடவையாக மீண்டும் 05-09-2025 அன்று தெரிவு செய்யப்பட்டதுடன் 04-09-2028 வரை குறித்த பதவியில் சேவையாற்றவுள்ளார்.

Powered by Blogger.