மட்டக்களப்பு மாமாங்கம் கிராமத்திற்கான 2025 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி குழு கூட்டம்!

14-09-2025

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் கோரிக்கைக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி இரவு விஜயம் செய்து கிராம மக்களின் பிரச்சனை கேட்டு அறிந்து கொண்டார்.




















மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பி.நாகராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் மாமாங்கம், M.உதயராஜ் மாநகர சபை உறுப்பினர் மாமாங்கம், கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் T.இந்திரன், கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்                                                                       சேதம் அடைந்த மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் நெசவு நிலையம் மற்றும் புனரமைக்கப்படாமல் காணப்படும் சேதமடைந்த வடிகான்கள் ஆகியவற்றினை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் சென்று பார்வையிட்டார்.


மாமாங்கம் கிராமத்தில் புனரமைக்கப்பட வேண்டிய திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவுகளையும் கிராம மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Powered by Blogger.