தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்க அவர்கள் இன்றைய தினம் (12.09.2025) யாழ் தேர்தல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராம பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான E Services தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் நாளைய தினம் நெடுந்தீவில் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றினை இன்றைய தினம் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ் ஊடக சந்திப்பில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ.சசீலன், வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் திரு.இ.கி.அமல்ராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.