பிரதேச மாவட்ட மற்றும் தேசிய மட்ட இலக்கிய விழா 2025 வாய்மொழி மூலமான போட்டிகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் இன்று (08) இடம் பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாவட்ட மட்டத்திலான சிறார்களில் கலை இலக்கிய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இப்போட்டிக் காணப்பட்டன.
இதன் போது நாட்டார் பாடல், பாடல் நயத்தல், கதை சொல்லுதல் போன்ற வாய்மொழி மூலமான போட்டிகள் பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கணிஸ்ட பிரிவு, சிரேஸ்ட பிரிவு, அதி சிரேஸ்ட பிரிவு மட்டங்களில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.