உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட முதல்வர் சிவம் பாக்கியநாதன் ,பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார் மற்றும் பிரதி ஆணையாளராக கடமையாற்றி ஆணையாளராக பதவி உயர்வு பெற்ற ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் அத்தோடு புதிதாக மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் துரைசிங்கம் மதன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு விஸ்வகர்மா சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் இவர்களுக்கான பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் மாநகர சபை முதல்வருக்கான நினைவுச் சின்னமும் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.