தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தெளிவூட்டல் செயலமர்வு!!


தேர்தல் செயன்முறையில், இளையோர் (இளைஞர் மற்றும் யுவதிகள்) பெண்கள் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களின் / ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் மேம்படுத்தப்பட்ட ஈடுபாடு மற்றும் பங்குபற்றல் பற்றிய தேர்தல்களுடன் தொடர்புடைய பங்காளர்களுடனான மாகாண மட்ட செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.













இச் செயலமர்வானது தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (23) திகதி மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.


தேர்தல் தொடர்பான   போதியளவான தகவல்கள் இல்லாமை காரணமான தகவல்கள் மற்றும் ஜனநாயக செயன்முறைகளின் முனைப்பான   விதத்தில் பங்கேற்பதற்கான தடைகள் மற்றும் தேவையான கொள்கை மற்றும் ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பாக இதன் போது வளவாளர்களினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் எதிர்காலத்திலும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடாத்த வேண்டியதன் அவசியம், பொய்யான தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், பங்குபற்றுனர்களின் அனுபவப் பகிர்வு மற்றும் ஆலோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


குறித்த செயலமர்வின் பிரதான வளவாளராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் அவர்களும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என்.விக்டர், 

விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.வீ.பைறுஸ், பெண் செயற்பாட்டாளர் சுபத்திரா  யோகசுந்தரம், இளைஞர் செயற்பாட்டாளர் சிவகுமாரன் ஹைக்கிரீவன் ஆகியோரும் கலந்துகொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்தனர்.


இச்செயலமர்வினை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்

சிராணி தேவகுமாரினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களும், தேர்தல்களுடன் தொடர்புடைய பங்காளர்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.