மட்டு சத்துருக்கொண்டான் புதைகுழி தோண்ட கோரி மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி

 மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழின படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.






மட்டு மாநகர சபையின் 3 வது மாதாந்த அமர்வு  நேற்று வியாழக்கிழமை (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது இதன்போது தமிழரசு கட்சி உறுப்பினர் திருமதி தயாளன் கௌரி சத்துருக்கொண்டான் படுகொலை நீதிகோரி புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார். 


இதன்போது அவர் கடந்த 1990-9-9 சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழின படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.


இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வரும் நிலையில் 1990-9-9 இன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கு இருந்த சிறியோர் தொடக்கம் முதியவர் வரைக்கு 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர்; இணைந்து அங்கு வைத்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.


இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்ட விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளிக்கப்பட்டு இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது.


இந்த படுகொலை இடம்பெற்று எதிர்வரும் மாதம் 9ம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்ட ஒரு பாரிய படுகொலையாக இந்த மாவட்டத்தில் காணப்படுகிறது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிசார் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் மத்தியில் அதை தாண்டி அஞ்சலி செலுத்தி வந்தனர்.


இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி, மற்றும்  ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்து செம்மணி சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார். 


ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விஷயங்களை செய்வதாக தெரிவித்தார்.; இருந்த போதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள் அப்போது எனக்கு 4 வயது அன்றைய தினம் எனது பெற்றோர்  சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலயத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு வந்தபடியால் தப்பிக் கொண்டேன். 

எனவே உண்மை ஒருநாளும் உறங்காது செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பபட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார்


இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை 35 ஆவது ஆண்டு நினைவு தினத்தையிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். 


Powered by Blogger.