மட்டு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்பு!


( கனகராசா சரவணன்) 



வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125 வது மையில் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.



வாழைச்சேனை அரச புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் அரச புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து சம்பவதினடான இன்று பிற்பகல் 2.50 மணியளவில் குறித்த இடத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டுகளை மீட்டனர்.


இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று நாளை திங்கட்கிழமை (27) வெடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர். 


இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.