இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா - 2025 எதிர்வரும் அக்டோபர் 4 மற்றும் 5ம் திகதிகளில் காலை 8:30 மணி முதல் செங்கலடி, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் கூடத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இரு நாட்களாக நடைபெறவுள்ள நிகழ்வுகளில் நாளாந்தம் மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில், விவசாய விஞ்ஞானம், கலை மற்றும் அபிவிருத்தி பொருளாதாரம் ஆகிய மூன்று துறைகளில் முதுமானி பட்டங்களும், முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா உட்பட மருத்துவம், தாதியியல், சித்த மருத்துவம், விஞ்ஞான கௌரவம், கலை கௌரவம், வணிக நிர்வாகம், வர்த்தக கௌரவம், நுண் கலை, ஆகிய துறைகளை உள்ளடக்கியதாக சுமார் 52 இளமாணிக் கற்கைகளுக்கான பட்டங்கள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ்களும் 1966 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.