மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரை சந்தித்து வாழ்த்திய சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டு!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜா அவர்களுக்கும் மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது.








மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  (29) திகதி காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சிவில் சமூக பிரதிநிதிகள் புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள மாவட்ட செயலாளர் அவர்களை வாழ்த்தியதுடன், குறித்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மக்களின் சார்பாக அவரை வரவேற்பதாக தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் கூட்டுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட மாதாந்த சந்திப்பினை மேற்கொள்ள வேண்டிய தன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது மாவட்ட செயலாளரை தெளிவுபடுத்தியிருந்தனர். 


மாவட்டத்தின் அவசர விடயங்களை நிவர்த்தி செய்ய தேவையேற்படின் குறித்த கட்டமைப்பின் கூட்டுக் குழு அரச அதிபரை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது. 


சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள், மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெண்கள் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட விவசாய சங்கங்கள், கால்நடை பண்ணையாளர்களின் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், உற்பத்தி துறை சார்ந்த சங்கங்கள் என பலரும் கலந்து கொண்டு புதிய அரச அதிபரை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.