கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.
29.5 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருள் கொண்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, , 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்நாட்டின் தபால் சேவையை நவீனமயமாக்கி, அந்த சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் விரைவான செயல் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரசாங்கம் அண்மையில் 20 புதிய தபால் நிலையக் கட்டிடங்களின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் ஐந்தாவது தபால் நிலையக் கட்டிடமாக களுவாஞ்சிக்குடி புதிய தபால் நிலையக் கட்டிடம் கட்டப்படுகிறது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர், பிரதி தபால் மா அதிபர் (அபிவிருத்தி) துசித ஹுலங்கம, பிரதி தபால் மா அதிபர் (கிழக்கு மாகாணம்) எஸ்.பிரகாஸ், மட்டக்களப்பு மாவட்ட தபால் அத்தியட்சகர் எஸ். ஜெகன், களவாஞ்சிக்குடி தபால் அதிகாரி ஆர்.யு.டி. ரொமேஷ் மற்றும் ஊழியர்கள் உட்பட ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.