தங்காலை, சீனிமோதர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொரியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.