வங்குரோத்து நாடாக மாறிய அலிபாபாவும் 40 திருடர்களும் கூட்டத்துக்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை எம்.பி கந்தசாமி பிரபு!
இந்த நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி புரிந்தவர்களால் வங்குரோத்து நாடாக மாறிய அலிபாபாவும் 40 திருடர்கள் கூட்டம் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த திருட்டு கூட்டத்துக்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை அதேவேளை திருடர்களால் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதை இன்று நாங்கள் நிரூபித்து காட்டியிருக் கின்றோம் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நாட்டை பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கடந்த 20 வருடத்திற்கு பின்னர் மட்டக்களப்பில் இருந்து கண்டி ஊடாக கம்பளைக்கான பஸ் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
பயணிகளின்; வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டை பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம் ஜனாதிபதி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் பல அபிவிருத்தி வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
ஒரு குடும்பத்தில் தந்தை ஒருவர் அனைவரையும் பாதுகாத்து அரவணைத்து குடும்பத்தை முன்னோக்கி செல்லுவாரே அதேபோல் இந்த நாட்டின் மக்களை தன்னுடைய பிள்ளைகள் போல அன்பும் பாசமும் காட்டி பாதுகாப்பை வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டிருக்கின்றார்.
இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர் கட்சியினர் அலிபாபாவும் 40 திருடர்களும் போன்று மக்களால் வெறுக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் 75 வது ஆண்டு விழாவில் அந்த திருடர் கூட்டம் ஒன்று சேர்ந்துள்ளது
இந்த திருடர் கூட்டத்தில் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் திகாம்பரம். ஏல்.எம்.ஹிஸ்புல்லா போன்ற தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். இவர்கள் இந்த நாட்டை மீண்டும் ஒரு மோசமான பாதாளத்துக்கு கொண்டு போய் நாட்டை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர்.
இந்த தலைவர்கள் தான் கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் இவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தான் இந்த நாடு எதிர் கொண்டிருந்தது இதன் விளைவு என்ன என்பதை பாத்திருப்பீர்கள் இறுதியாக இந்த நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக மாறியது.
எனவே நாங்கள் நாட்டை பொறுப்பேற்கும் போது இவர்கள் நாங்கள் மத தலங்களை மூட போவதாகவும் மீண்டும் ஒரு வரிசை யுகம் உருவாகும் மக்கள் தங்கள் வாழ்வை முன்னெடுக்க முடியாது போகம் என பல பொய்களை கூறி பல பிரச்சார செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
இப்போதும் இவர்கள் பல பொய்களை கூறிக் கொண்டு முயற்சிகளை மேற்கொண்டனர் எனவே இவர்களது பித்தலாட்டம் மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது இந்த திருடர் கூட்டத்தை ஒரு பக்கமும் தேசிய மக்கள் சக்தியை இன்னொரு பக்கமும் ஏற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் மக்களுக்கு விளங்கியுள்ளது தீயவர்கள் யார், நல்லவர்கள் யார் என ஆகவே இந்த திருட்டு கூட்டத்துக்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை
திருடர்களால் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதை இன்று நாங்கள் நிரூபித்து காட்டுகின்றோம் நாங்கள் ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றோம். இப்போது நாடு தேசிய மக்கள் சக்தியால் பொருளாதாரத்தில் மும்மரமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது அந்நிய செலாவனியை உழைத்து தரக்கூடிய சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
அதே போன்று ஏற்றுமதி துறையில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது இதனால் நாடு பொருளாதாரத்தை ஒரு ஸ்திரதன்மையை நோக்கு போய் கொண்டிருக்கிறது டன் வெளிநாட்டு தலைவர்கள் எங்கள் தலைவருடன் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர் எனவே மக்கள் விரும்புகின்ற மக்களால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இருக்கின்றது என்றார்.