வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்காவின் ஏற்பாட்டில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி!
வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்காவின் ஏற்பாட்டில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நெறியில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (02) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்காவின் இணைப்பாளர் ஜே.நகுலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.குணாளன், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP) ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்ததுடன், செயலமர்வினை மங்கள விளக்கேற்றலுடன் மங்களகரமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
குறித்த மூன்று நாள் செயலமர்வில் உணவு உற்பத்தி, வியாபார பதிவு, வியாபார விஸ்தரிப்பு, விளம்பரப் படுத்தல் உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இச்செயலமர்வில் மட்டு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி ஆர்.கோகிலா தேவி உள்ளிட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், சுய தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்காவின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், பயிற்சி செயலமர்விற்காக வளவாளராக துறைசார் நிபுணர் வீ.லோகிதராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் வளவாண்மை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.