வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் வரவே அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்;- அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்-

 வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டதான ஹர்த்தாலின் பின்னணியில் ஏம்.சுமந்திரனை வடமாகாண முதலமைச்சராகவும் இரா. சாணக்கியன் கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டுவரும் நோக்கில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டதுடன்  மட்டக்களப்பு மாநகர மேயர் கடைகளை மூடுமாறு அடாவடியாக செயற்பட்டதை ஒருபோது எற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் சிவதர்சன் தெரிவித்தார்.




மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா கற்கைநிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். 


நேற்று அறிவிக்கப்பட்ட ஹார்த்தாலானது இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று என்பதுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரின் அரசியல் சுய இலாபத்திற்க்காகவே இது முன்னெடுக்கப்பட்டதாகவே நாம் பார்க்கி றோம்.

ஒரு போதைபொருள் வியாபாரி இராணுவத்தினரால் அடித்து கொல்லப்பட்டட்டுள்ளார். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நீதித்துறை இருக்கின்றது. இவர்கள் யார் அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க.
 

மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னாள் இரரிhங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவ்வாறு ஒரு சம்பவம் கிழக்கில் இடம்பெற்றிருந்தது  அப்போது தமிழரசு கட்சி எங்கே போனது, ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்த சுமந்திரன் இங்கே போனார்? ஏன் அப்போது இங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை, ஹார்த்தாலும் முன்னெடுக்க ப்படவில்லை.

முந்தையங்காட்டில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டார் என்ற காரணத்திற்காக வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தை வெளியேறுங்கள் என்று சுமந்திரன் கூறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது.



இந்த நாட்டில் ஈஸ்டர் தாக்குதல் என்ற ஒரு கோர சம்பவம் நடந்தது. அந்தநேரத்தில் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி, நாட்டிற்கு பாதுகாப்பை வழங்கியவர்கள் அவர்கள். அவர்களை வெளியேறுங்கள் என்று சொல்லி அவர்கள் வெளியேறிவிட்டால் அது இனப்பிரச்சினையை தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.

எனவே சுமந்திரன் சார்ந்த தமிழரசு கட்சியினருக்கு போலி தேசியம் பேசி மக்களை ஏமாற்ற மட்டுமே தெரியும் என்பதுடன் வடக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள எம்.சுமந்திரனும் இரா.சாணக்கியனும் ஆடும் அரசியல் நாடகங்கள் மேற்கொள்ளவதற்காகவே வடக்கு கிழக்கில் ஹர்த்தால் 


அதேவேளை மட்டக்களப்பில் திறந்த கடைகளை மூடுமாறு மட்டு மாநகர சபை முதல்வர் வர்தகர்களை வற்புறுத்தியமை ஏற்கமுடியாது ஒன்று எனவே இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார். 
Powered by Blogger.