மட்டக்களப்பில் இன்று (18) வழமையான நிலை - போக்குவரத்து வழமை போல் காணப்பட்டது.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், மட்டக்களப்பின் நகர்ப்புறம் உட்பட சகல பகுதிகளிலும்  வழமையான நிலையே நிலவியது. 

 

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்ப நாளாகிய இன்று மாணவர்களின் வருகையில்லாத போதிலும், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழமை போல் சமூகமளித்துள்ளார்கள்.  


வர்த்தக நிலையங்கள்  திறந்துள்ளதுடன், அநேகமான கடைகள் அடைக்கப்பட்டு 12.00 மணியின் பின்னர் திறக்கப்பட்டன.






அரச மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சுமுகமாக இடம்பெற்றதுடன், அரச அலுவலகங்கள்,  வங்கிகள் போன்றவையும் வழமை போல் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.