கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் 'சறோஜா திட்டத்தில்' 42 சிவர்களுக்கு கற்றல் உபகரணங்கன் வழங்கிவைப்பு
மட்டக்களப்பில் மக்கள் பாதுகாப்;பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஸ்பிரயோகத்தை தடுக்கும் திட்டத்தின் கீழ் கப்பல் கப்டன் பசில்ராஜாவின் நிதியுதவியுடன் 42 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வழங்கி வைத்தார்.
மட்டு தலைமையக பொலஜஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார ஏற்பாட்டில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது
இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவான் மெண்டிஸ், சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, நன்கொடையாளர் கப்பல் கப்டன் பசில்ராஜா, அவரது துனைவியார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல்; உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் கல்வியினை தொடர முடியாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பிள்ளைகளின் கல்வி மேம்படுத்தும் வகையில மட்டு தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.