டயஸ்போராக்களை திருப்திப்படுத்த பிள்ளையானை தண்டிக்ககூடாது நாமல் ராஜபக்ச

 கருணா அம்மான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரியும்போது 6,000 க்கும் மேற்பட்ட கிழக்கு போராளிகள் பிரிந்து வந்தனர், வீடு வந்து சேர்ந்த பலரை ஊருக்குள் இருந்த புலி புலனாய்வாளர்கள் காட்டிக்கொடுத்து பலர் விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு  கொல்லப்பட்டனர், இதனால் தங்கள் உயிரைக்காப்பாற்றுவதற்காக  சிலர் இராணுவத்துடனும் இன்னும் சிலர் ஏற்கனவே இருந்த துணை இராணுவக்குழுக்களுடனும், இன்னும் சிலர் இராணுவ புலனாய்வளர்களினால் அழைத்து செல்லப்பட்டும், இன்னும் சிலர் TMVP அரசியல் கட்சியிலும் இணைந்தனர்....  


TMVP அரசியல் கட்சியில் இணைந்த பலரை படிப்படியாக இயல்பான வாழ்க்கைக்கும், இன்னும் சிலரை அரச தொழிற்துறைகளிலும் இணைத்த அப்போதைய முதலமைச்சர் பிள்ளையான் இன்னும் சிலரை அவர்களது விருப்பம் போல்  வெளிநாடுகளுக்கு செல்வதற்காக உதவியும் செய்தார்......  சரத் பொன்சேகா தற்போது தெரிவித்ததைப்போன்று பிள்ளையான் பின்னால்  பல சிறுவர் போராளிகளே வந்திருக்கலாம்....... 


அந்தக் காலகட்டத்தில் கருணா குழு என்றே அப்போதைய துணை இராணுவக்குழுக்கள் உட்பட  அனைவரையும் பொதுவாக கூறப்பட்டது. கருணா தலமையிலான போராளிகள் சிலர் மட்டக்களப்பு பார் வீதிக்கு அருகாமையில் முகாமிட்டு இருந்தவேளை  குழுவுக்குள் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோக சண்டையில் பல இளைஞர்கள்  முகாமில் கொல்லப்பட்டனர். அதன்பின்னரே பிள்ளையான் குழு என்று தனியாக அரசியல் நீரோட்டத்தில் இணைந்தனர்..... 


விடுதலைப்புலிகள் தேடித்தேடி பிரிந்துவந்த போராளிகளை சுட்டுக்கொண்டு இருந்தபோது தங்கள் உயிரைக்காப்பாற்ற இராணுவ முகாம்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் குடும்பங்கள் குறிவைக்கப்பட்டன....... குடும்பங்களை இழந்த போராளிகள் பழிவாங்க புறப்பட்டனர்..... அந்த நேரத்தில் ஆயுதம் தூக்கி துணை இராணுவக்குழுக்களாக இருந்த போராளிகள் படிப்படியாக இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி தங்கள் குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கையில் முன்னாள் புலிகளின் பழிதீர்க்கும் படலம் இப்போது வேறு ஒரு கோணத்தில் ஆரம்பமாகி உள்ளதாகவே பல முன்னாள் போராளிகள் அச்சம் வெளியிடுகின்றனர்....... 


வெளிநாடுகளிலுள்ள புலிகளின் அமைப்புகளான புலம்பெயர் அமைப்புகள் புதிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட நல்லுறவு அடிப்படையில் அந்தக்கொலை இந்தக்கொலை என பட்டியல்கள் தூசிதட்டப்படுகின்றன......  இராணுவத்துடன் அல்லது இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்திருந்த முன்னாள் கிழக்கு போராளிகள் குறிவைக்கப்படுகின்றனர்.......


Powered by Blogger.