பிள்ளையானைத் தேடிச் சென்ற பணப்பை, திருப்பி அனுப்பிய பிரசாந்தன்





ஐக்கிய தேசியக் கட்சியினர் தம்முடன் டீல் பேசியதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் எமது கட்சியின் தலைவரை சிறையில் சந்தித்து பேசுவதற்கு சென்றவேளை அரசியல் தொடர்பில் பேசுவதாயின் செயலாளருடனும் செயற்குழுவுடனும் பேசுங்கள் என்று கூறியிருக்கின்றார்.
மூன்று தடவைக்குமேல் எமது அலுவலகத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் என்னுடன் பேரம்பேசலில் ஈடுபட்டார். இரு நாட்களுக்குள் தலைவரை விடுதலை செய்வதாகவும் மேலும் பல வரப்பிரசாதங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.  

4 வருடங்களுக்கு மேலாக தலைவரை விடுதலை செய்யாதவர்கள், இன்று கிழக்கிலே மக்கள் செல்வாக்குள்ள ஒருவராக எமது தலைவர் இருப்பதை உணர்ந்தவர்கள் எம்மை நோக்கி வருகின்றனர். மேடை மேடையாக தலைவரை விமர்சிப்பவர்கள் திரைமறைவில் பேரம் பேசுகின்றனர். எம்மை நம்பியுள்ள மக்களை நாம் ஒருபோதும் அடகு வைக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

Powered by Blogger.