மட்டக்களப்பில் சறோஜா திட்டத்தில் பொலிஸ் சேவா வனிதா இயக்கம் 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு
பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் ஏற்பாட்டில் கல்லடியிலுள்ள சன்சயின் உல்லாச விடுதியில் பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவி நில்மினி நீட்டா சமரதுங்கவும் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.யு.டி கினிகே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன். பொலிஸ் அத்தியட்சகராக, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிறுவர்கள், பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.
இதில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பற்று இருக்கும் சிறுவர்களில் முதற்கட்டமாக 200 சிறுவர்களை தெரிவு செய்;து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் வழங்கி வைத்தனர்.








