வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் சமூகம் சார்ந்த சமய கலை கலாசார நற்பணிகள்!

 வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் சமூகம் சார்ந்த சமய கலை கலாசார நற்பணிகள்..,

 






எமது ஆலய நிருவாக சபையானது ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சமூகம் சார்ந்த பல கலை,கலாசார நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.இதில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி மற்றும் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவ மாணவிகள் ஆலயத்திற்கு வருகை தரும் போது அவர்களின் திறமைகளை வளர்க்கும் முகமாக ஆலயத்தில் பஞ்சபுராணம் ஓதுதல்,சமயம் சார்ந்த வினாவிடைப்போட்டிகள் மற்றும் பஜனைகள் போன்ற கூட்டுப்பிராத்தனைகள் ஆலய குருவினாலும் ஆலய நிருவாக சபையினராலுமஂ பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களது திறமைக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.அந்த வகையில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆலயத்தலைவர் திரு.கி.கெங்கேஸ்வரன் அவர்கள் மாணவர்களினஂ கல்வியினஂ தூரநோக்கு சிந்தனையின் வெளிப்பாடாக இப் பிரதேச மாணவ மாணவிகளின் கல்வியில் ஆலயம் கவனஞ்செலுத்த வேண்டும் என பேத்தாழை விபுலானந்நா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா கெளரவிப்பு நிகழ்விற்கு ஆசிரியர்களுக்கான 48 நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்திருந்தார்.


மேலும் ஆலயத் தலைவர் தெரிவிக்கையில் சமயமும் சமூகமும் வளர வேண்டும் எனும் கருப்பொருளுக்கமைய எமது ஆலயமானது முழுமையாக வளர்ச்சியடைய இன்னும் குறுகிய காலமே உள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்ததன்  பிற்பாடு ஆலயத்தில் சேரும் நிதிகள் இப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்த வேண்டும் எனவும் , எழுத்தறிவித்தவன் இறைவன் என ஆசிரியர்களை இறைவனுக்கு நிகராக பாராட்டியதோடு ஆலயத்தில் இருந்து மாணவச்செல்வங்களின் கல்வியை வளர்ப்போம் எனவும் இதற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் எனவும் கூறி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி நிறைவுசெய்தார். 


*ஒவ்வொரு பாடசாலையும் ஆலயத்திற்கு நிகராகும்* 🙏🙏🙏🙏


   

Powered by Blogger.