நிதி திரட்டும் நோக்கத்துடன் தெரிவுசெய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் உண்டியல் வைக்கும் நிகழ்வு!

 வன்முறையால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின்  பாதுகாப்பு மற்றும்  உளநல மேம்பாட்டையும் அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நோக்குடனும் சமூக பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தினால் ( SEDF ) முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்திற்கானகான நிதி திரட்டும் நோக்கத்துடன் தெரிவுசெய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் உண்டியல் வைக்கும் நிகழ்வு 26.10.2025  ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள seven star restaurant ல் ஆரம்பித்துவைக்கப்பட்டது .





 இந்நிகழ்வில் நிறுவன உத்தியோஸ்தர்கள் மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன்   Seven  Star  Restaurant   உரிமையாளரிடம் உண்டியல்   கையளிக்கப்பட்டது. இதன் முதாலவது நிதி பங்களிப்பு  கடை உரிமையாளரினால்  வழங்கி ஆரம்பிக்கப்பட்டது.

அத்தோடு ஏனைய பங்குபற்றுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கினார்கள்.

 

மேலும்  இந்நிகழ்வு தொடர்பாக SEDF  நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி.ஜே.ரஜிதா  அவர்கள் கருத்து தெரிவிக்ககையில், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கானஉடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தற்போதைய சூழ்நிலையில் நிதி வழங்குனர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் எமது சமூகத்தில் உள்ள நல்உள்ளங்களின் ஊடாக  நிதியினை சேகரித்து பாதிக்கப்படவர்களை மீட்டு சமூகத்தில் இணைக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றோம் .  


அந்தவகையில் பல்வேறுப்பட்ட நிதி திரட்டல் முறைகளை செய்து வருகின்றோம் . அதில் ஓர் அங்கமாகவே இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது .

ஆகவே அனைவரும் உங்களது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்ததோடு இச்செயல் திட்டம் முன்னெடுக்க அனைவரும் தங்களால் ஆன பங்களிப்பை SEDF நிறுவனத்துக்கு வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Powered by Blogger.