மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் சுற்று ஓவியப் போட்டிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் சுற்று ஓவியப் போட்டிகள் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு. கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச கட்புலக்கலை குழு ஆகியவற்றால் ஏற்பாடில் மாவட்ட செயலக மேற்பார்வையின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் வழிநடத்துகையின் அரசினர் ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் இன்று (14) இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் கல்வி கற்கும் பாலர், சிறுவர், கனிஸ்ட , சிரேஸ்ட , அதி சிரேஸ்ட மட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
கலாசார அலுவல்கள் திணைக்கள இலங்கை கலைக் கழகத்தின் அரச ஓவியம் மற்றும் சிற்ப ஆலோசனைக்குழு உறுப்பினரும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலக் கலை சிரேஸ்ட விரிவுரையாளர் பாக்கியராஜா புஸ்பகாந்தன் வளவாளராக கலந்து கொண்டார்.
அரச சிறுவர் ஓவிய போட்டியில்
முதல் சுற்றில் வெற்றி பெற்ற 161 சிறுவர்கள் இரண்டாம் சுற்று சிறுவர் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
மாணவர்கள் மத்தியில் காணப்படும் ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் முகமாக இப் போட்டிகள் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களான இந்திக விஜேவர்தன, அஜித் ரத்ராயக்க மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.