மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டசெயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு இன்று (25)
சிவில் சமுக அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகளால் சேவை நலன் பாராட்டும் நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் அரசாங்க அதிபருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கப்பட்டதுடன், அரசாங்க அதிபருடன் கடமையாற்றிய அனுபவ பகிர்வுகளும் இதன் போது கருத்துப்பகிர்வுளாக இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பல துறை சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை பாராட்டியதுடன் குழு செயற்பாடுகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளும், மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டு கலந்து கொண்டு அரசாங்க அதிபரை வாழ்த்தி விடைகொடுத்திருந்தனர்.