ஜனாதிபதி மற்றும்புதிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள்!
ஜனாதிபதி மற்றும்புதிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதே வேலை மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான வீதிகளில் காணப்படும் வடிகான்களை துப்புர செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டது
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக டெங்கு நோய் பரவலை தடுக்கும் முகமாகவும் தொற்று நோய்கள் ஏற்படாது இருக்கும் வண்ணம் மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பிரிவினர் மற்றும் தீயணைக்கும் படை பிரிவு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்கள ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த பாரிய சுத்தப்படுத்தும் பணிகளை இன்று முன்னெடுத்தனர்
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என் தனஞ்செயன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பணிகளின் போது மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் மற்றும் அரச திணைக்கலங்களின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்