மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
மட்டக்களப்பில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது வேண்டுகோளிற்கு அமைய கத்தார் சரிட்றி நிறுவனத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் இன்று (17) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்களிற் கான மாவட்ட இணைப்பாளர் யூ.எஸ்.றிஸ்வி அவர்களின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சுய தொழில் முயற்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப தையல் இயந்திரங்கள், தானிய வகைகளை அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் பல பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் கத்தார் சரிட்றி அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாரிக் மன்சூர் மற்றும் கத்தார் சரிட்றி அமைப்பின் திட்ட உத்தியோகத்தர்
பைசல் பரீட் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.