வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டம்!!

 வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டம்!!


கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டம் இன்று (01) திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையில் இடம்பெற்றது.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் தலைமையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலை வாணி  கலையரங்கில் இடம் பெற்ற  மே தினக் கூட்டத்தில் முன்னால் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன், முற்போக்கு தமிழர் அமைப்பின் மாவட்ட பிரதான அமைப்பாளர் தர்மபாலன் நிர்மலன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன்,  உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


குறித்த மே தின கூட்டத்தில் கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.









Powered by Blogger.