ரோஹண விஜேவீரவின் உடன்பிறந்த தங்கை பலி

 மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவின் உடன்பிறந்த தங்கை சித்ராணி விஜேவீர நேற்று  சனிக்கிழமை(26.04.2025) உயிரிழந்துள்ளார்.

ரோஹண விஜேவீரவின் உடன்பிறந்தவர்களில் இதுவரை காலமும் உயிர்வாழ்ந்த ஒரே நபராக அவர் அறியப்பட்டிருந்தார்.

பட்டபெந்திகே தொன் சித்ராணி விஜேவீர 1948ஆம் ஆண்டு மாத்தறையில் உள்ள கோட்டேகொடவில் பிறந்திருந்தார்.

இறுதிக் காலத்தில் அவர் தங்காலையில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அவரது இறுதிச் சடங்குகளில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Powered by Blogger.