தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்றைய தினம் (19.05.2023) ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Fiji, Vanuatu மற்றும் New Caledoniaவிற்கு இடையே நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
