மகள்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தை - யாழில் நடந்த கொடூரம்

 யாழ்ப்பாணத்தில் மாற்று திறனாளிகளான 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கும் அவரது சகோதரியான 8 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் அவர்களது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



மாற்று திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதை அடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களது தந்தையால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சிறுமிகள் பாடசாலையில் தங்கி கற்று வருகின்ற நிலையில் விடுமுறையில் வீடு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளின் தாய் கூலி வேலைக்கு செல்பவர் என்றும் அவர் காலையில் சென்றால் இரவே வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.