யாழில் தொடரும் அசம்பாவிதம் - சடலமாக மீட்கப்பட்ட யுவதி

 யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று (18.05.2023) இரவு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இராசதுரை நிரோஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றில் வீழ்ந்தவரை மீட்ட அயலவர்கள், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.

யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Powered by Blogger.