ஜனாதிபதியால் பதவி விலக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் நிலைப்பாடு

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து நீக்கினார்.



இனவாத அமைப்புக்களோடு இணைந்து செயலாற்றியமை தொடர்பில் இவர் பதவி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் முன்னால் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத்திடம் இந்த விடயம் தொடர்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

கேள்வி:- கிழக்கு மாகாண ஆளுநராக சுமார் மூன்றரை ஆண்டுகளாக கடமையாற்றிய உங்களை அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கி இருந்தார் அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

என்னை இந்த பதவியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்தார். எனினும் அந்தப் பதவியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கி உள்ளார். 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர். இந்த நாட்டின் ஒருமைப்பாடு இறையாண்மை என்பனவற்றை பாதுகாத்து கொள்வதற்காக வாக்களித்தனர்.

எனினும் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று, அரசியல் கிளர்ச்சி சூழ்ச்சி மற்றும் சில காரணிகளால் ஜனாதிபதி பதவியில் மாற்றம் ஏற்பட்டது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியிடம் என்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தினால் அந்தப் பதவியில் நீக்கியிருக்கலாம்.

கேள்வி:- ஒன்பது மாகாணங்களில் மூன்று மாகாண ஆளுநர்கள் மட்டுமே நீக்கப்பட்டனர். அப்படியானால் மூன்று பேருக்கு மட்டும் நல்ல அபிப்பிராயம் இல்லாமல் இருந்ததா?

ஏனையவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. அரசியல் இயந்திரத்துடன் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்பட தவறியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  உயர் பதவி வகிக்கின்ற எவரும் அரசாங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட நபர்கள் என நான் நினைக்கவில்லை. தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கொண்டால் என்னிடம் அரசியல் கொள்கையுண்டு. எனினும் ஆளுநர் பதவி என்பது ஒட்டுமொத்த மாகாணத்திற்கும் சேவை ஆற்றுவதற்கானது.

எனவே நான் அனைவருக்கும் சேவையாற்ற முயற்சித்தேன். அதன் அடிப்படையிலேயே சேவையாற்றினார். இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒன்று கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பினைவிட ஏனைய தரப்புகள் அதிகம் எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களுக்கு மட்டும் சேவை செய்தால் என்னால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும்.

கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் இன மத வேதமின்றி செயல்பட்டேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டும் அதுவேயாகும்.

கேள்வி:- தங்களது மாவட்ட மக்களுக்கு கூடுதலான சேவை வழங்கவில்லை எனவும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும் அன்று அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தினர். தமிழ் அரசியல்வாதிகளா அழுத்தங்களை பிரயோகித்தனர்?

இந்த மாகாணத்தில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளும் அழுத்தங்கள் பிரயோகித்தனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் அரசியல்வாதிகள் என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தினர். இந்த அரசியல்வாதிகள் அனைத்து விடயங்களையும் தலையீடு செய்ய முயற்சித்தனர்.

அனுமதி பத்திரங்கள் விலைமனுக் கோரல்கள், இடமாற்றங்கள், தொழில் வாய்ப்பு வழங்குதல் போன்ற அனைத்து விடயங்களிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எனினும் நான் எந்த விதமான பேதமும் இன்றி அழுத்தங்களும் இன்றி சேவையாற்றுவதற்கு நான் முயற்சித்தேன்.

எனினும் இதனை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் ஆளுநர் ஒருவருக்கு விசேட அதிகாரம் கிடையாது. அழுத்தங்களை தோற்கடிக்க நான் நடவடிக்கை எடுத்தேன்.

கேள்வி:- எங்களுக்கு தெரியும் நீங்கள் இனவாத கொள்கையை உடையவர் என்பது இந்த விடயமும் அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகிக்க ஏதுவானதா?

மாகாணத்திற்குள் அவ்வாறான ஒரு தாக்கம் ஏற்படவில்லை எனினும் பிரிவினைவாதிகளின் அழுத்தம் காணப்பட்டது.

நான் சிங்கள பௌத்த கலாசாரத்தை பாதுகாப்பதற்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் பேசுவேன். அதேபோன்று ஏனைய மத வழிபாட்டாளர்களுக்கும் இனங்களுக்கும் அவர்களது கலாச்சாரத்தை, மொழியை, மதத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு. நான் அதனை பெருமிதமாக ஏற்றுக் கொள்கிறேன்.

கிழக்கு மாகாண மக்கள் அதனை தங்களது செயற்பாடுகள் மூலமாகவே எனக்கு புரிய வைத்தனர். கிழக்கு மாகாணத்தில் நான் தமிழ் மக்கள் மத்தியிலேயே அதிக பிரபல்யம் பெற்று இருக்கின்றேன். தமிழ் மக்கள் தங்களது அன்றாட நிகழ்வுகளுக்கு என்னை அடிக்கடி அழைப்பார்கள்.

கேள்வி:- நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு சிங்கள மகா வித்யாலயத்தை நீங்கள் மீண்டும் ஆரம்பித்தீர்கள் இதற்கு ஏனைய இன சமூகங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றதா?

சிங்கள வித்தியாலத்தை ஆரம்பிப்பதற்கு எனக்கு இடையூறுகள் இருக்கவில்லை, எனினும் வேறு காரணிகள் அந்த நடவடிக்கையை காலதாமதமானது.

மேலும் வித்தியாலயத்தை முழுவதுமாக புனரமைக்க நேரிட்டது. எங்களுக்கு தெரிந்த நிறுவனங்களுக்கு நாம் இதுகுறித்து அறிவித்தோம் அவர்களிடம் பணம் திரட்டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் மட்டக்களப்பு வலயக் கல்விப் பனிப்பாளர் ஓர் தமிழர் அந்த அலுவலகத்தின் பணியாற்றி வரும் அனைவரும் பெரும்பாலும் தமிழ் பேசுபவர்கள், அவர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கண்டேன்

சிங்கள குழு ஒன்றினால் அந்தப் பிரதேசத்தில் வித்யாலயத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உண்மையில் பிரதேச மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிங்கள வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படும் என அவர்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் இருக்கவில்லை. உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டும் மாவட்டத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்று கூட இருக்கவில்லை ஒரு சிங்கள பிள்ளை இருந்தாலும் அவர் அவரது தாய் மொழியில் கற்பதற்காக பாடசாலை ஒன்று இருக்க வேண்டும்.

கேள்வி:- சியாம் மகா நிக்காய உருவாக்கப்பட்டு 270 ஆண்டுகள் பூர்த்தியாவது முன்னிட்டு கடந்த மே மாதம் 14ஆம் திகதி திருகோணமலையில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சம்பந்தன் தலைமையிலான தரப்பின் எதிர்ப்பு இடம்பெற்றது அது குறித்து உங்களது கருத்து என்ன?

நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வது பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது. இந்த ஒற்றுமை அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

மத்திய அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகளினால் இதனை புரிந்து கொள்வதற்கு தேவையான அறிவாற்றல் கிடையாது. அவர்களுக்கு புரிவதில்லை பிரிவினைவாதிகள் என்ன காரணத்திற்காக பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

இந்த மாகாணத்தில் மூன்றரை ஆண்டுகளாக சேவையாற்றி இருக்கிறேன் 20 சந்தர்ப்பங்களில் பிரிவினைவாதிகள் பல்வேறு பிரச்சனைகளை “ உருவாக்க முயற்சித்தனர் எனினும் நாம் மக்கள் மத்தியில் சென்று மக்களுக்கு பிரச்சனைகளை தெளிவுபடுத்தி அவற்றுக்கு நியாயமான தீர்வுகளை வழங்கி அந்த சந்தர்ப்பங்களை தோற்கடித்தோம்.

மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமை பிரிவினைவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் தான் இவ்வாறான பிரச்சனைகளை உருவாக்குகின்றனர்.

Tamilwin

Powered by Blogger.