இணையத்தில் அழகு சாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை

 கொழும்பு - கொஸ்வத்தை பகுதியில் வைத்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இந்த பெண் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் முகவரி குறிப்பிடப்படாத அழகு சாதனப் பொருட்களை இணையத்தின் வாயிலாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் வசித்த வீட்டிலிருந்து ஆயிரம் சிறிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.