முன்னாள்
பராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும்
என்பதில் தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பே குறியாக
இருக்கின்றது.
யோகேஸ்வரனுக்கு
தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம்கொடுப்பதில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள்
குழப்பமடைந்த நிலையில் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இடம் வழங்கினாலும்
யோகேஸ்வரன் தோல்வியடைய வேண்டும் என்பதற்காக தமிழரசுக் கட்சி துரைராஜசிங்கத்தையும் கல்குடா
தொகுதியில் களமிறக்கியுள்ளது.
மக்களால்
வெங்காய அமைச்சர் என்று அழைக்கப்படுகின்ற துரைராஜசிங்கம் மாகாண அமைச்சராக இருந்த காலத்தில்
எதையும் செய்யவில்லை என்று மக்கள் அவர்மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
துரைராஜ சிங்கத்தை
போட்டியிட வைப்பதன் மூலம் யோகேஸ்வரனின் வாக்குகளைப் பிரித்து. யோகேஸ்வரன் தோல்வியடைய
வேண்டும் என்பதே தமிழரசுக் கட்சியின் சூழிச்சி