தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இளைஞர்களுக்கு இடம் வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் இளைஞர்களுக்குக்கூட தொடர்ந்து ஏமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவருபவர் அக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சேயோன் அவர்கள்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களிலும் பழிவாங்கப்பட்ட சேயோன் அவர்கள் இத் தேர்தலிலும் பழிவாங்கப்பட்டுள்ளார்.
சேயோன் வேட்பாளராக தெரிவுசெய்யப்படவேண்டும் என்று மட்டக்களப்பு இளைஞரணி விடுத்த வேண்டுகோளைக்கூட ஏற்றுக்கொள்ளாது சேயோனை புறக்கணித்துள்ளனர்.