பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் நான்கரை வருடத்தில் செய்ய முடியாததை 60 நாட்களில் தான் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த 60 நாளில் தான் என்ன செய்துள்ளார் என்பதை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த முடியுமா?
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து மேடைகளில் அது செய்யப்படும் இது செய்யப்படும் என்று சொல்லப்படுகிறதே தவிர எதுவும் செய்வதாக தெரியவில்லை.
ஜனாதிபதி தேர்தல்கால உங்கள் வாக்குறுதிகள் என்னானது? கல்முனை பிரதேச செயலக விடயம் என்னானது?
உங்களது ஒவ்வொரு நகர்வுகளும் பேச்சுக்களும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான காய் நகர்த்தல்களே. ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
60 நாளில் செய்தவற்றை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.
குழம்பிய குட்டையில் பின்னர் மீன் பிடிக்கலாம்